செங்கல்பட்டில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு..!

0 2694

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே, நீட் தேர்வு தோல்வி பயத்தால்  தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐயஞ்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கமலதாசனின் மகள் அனுசியா, செப்டம்பர்  12 ஆம் தேதி ஆவடி மையத்தில் நீட் தேர்வு எழுதினார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதியிருந்த அவர், தோல்வி பயம் காரணமாக, செப்டம்பர் 16ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

40 சதவீத தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒரு மாத சிகிச்சைக்கு பின் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments