குடும்ப வறுமையை போக்க வேலை தேடும் பெண்களை குறி வைத்து கொள்ளை

0 2373

சென்னையில் குடும்ப வறுமையை போக்க வேலை தேடும் பெண்களை குறிவைத்து olx செயலியில் மசாஜ் மற்றும் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து கொள்ளையில் ஈடுபட்டவனை போலீசார் கைது செய்தனர்.

olx செயலியில் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தி, அதை பார்த்து தொடர்பு கொள்ளும் பெண்களை தனியாக வரவழைத்து தங்கநகை மற்றும் செல்போன்களை பறிப்பதாக தொடர் புகார் வந்த நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடங்களில் இருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்த போலீசார், ஹரி பிரசாத் என்பவனை கைது செய்து 7 சவரன் தங்கம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments