நவராத்திரி நிறைவைத் தொடர்ந்து தசரா பண்டிகை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக மக்கள் கொண்டாட்டம்..!

0 1818

நவராத்திரி நிறைவைத் தொடர்ந்து தசரா பண்டிகை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாக தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். ராவணனை ராமபிரான் அழித்ததைப் போல கொரோனா என்ற ராட்சசனையும் அழித்து மக்கள் நிம்மதி காண வேண்டும் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடந்த தசரா பண்டிகை பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. ராவணன் மேகநாதன், கும்பகர்ணன் உருவங்கள் தீ வைத்து தகனம் செய்யப்பட்டன

சரயு நதியில் ராமன் லட்சுமணன் சீதா ஆகியோர் துறவு பூண்டு காட்டுக்குச் சென்றதை நினைவுபடுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராவணன் உருவம் தீயிட்டுப் பொசுக்கப்பட்டு ராம ராஜ்ஜியத்தை வரவேற்கும் விதமாக தசரா பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை ஆலயத்தில் நவராத்திரி நிறைவு மற்றும் தசராவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments