புதிய சிக்கலில் சிம்புவின் ’மாநாடு’..!

0 11474
புதிய சிக்கலில் சிம்புவின் ’மாநாடு’..!

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் A Day என்ற கொரிய படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தயாரிப்பாளருக்கு, கொரிய படக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில் அதை மாநாடு படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் அதில் வந்த Time Loop முறை காட்சிகள் A Day என்ற கொரிய படத்தின் கதையைப் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் மாநாடு படக்குழுவினருக்கு, A Day படக்குழு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்களை வெளியாகின. ஆனால் யாரிடமும் இருந்து தங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என மாநாடு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments