பஞ்சாப் காங். தலைவர் பதவி ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றார் சித்து!

0 1911

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்துப் பேசிய சித்து தமது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நீடிப்பார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.பஞ்சாப் முதலமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்ற சரஞ்சித் சன்னியுடன் கருத்து வேறுபாடு நீடித்ததால் தமது கட்சித் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கட்சித் தலைமை சித்துவை சமாதானப்படுத்த அழைப்பு விடுத்தது.

இதனை ஏற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பின்னர் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத்துடன் ராகுல்காந்தியை சந்தித்தார் சித்து.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்து தமது எண்ணங்களை ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகவும் அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments