மத்தியப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளுக்கான புதிய சாக்லேட் கண்டுபிடிப்பு

0 1896

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆடு, மாடுகளுக்கான சாக்லேட்டை கண்டுபிடித்துள்ளனர்.

பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த இந்த சாக்லேட்டை  பசுந்தீவனம் கிடைக்காதபோது, மாற்றுத்தீவனமாகவும் பயன்படுத்தலாம் என்றும், இந்த சாக்லேட்டை கால்நடைகள் உண்கிறபோது, அவற்றின் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுகு, புண்ணாக்கு, அரிசி தவிடு, வெல்லப்பாகு, ஸ்டார்ச், சுண்ணாம்புத்தூள், உப்பு போன்ற பல பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாக்லேட் விரைவில் சந்தைக்கு வர உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments