உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு..!

0 1606

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். ஜான்சி அருகே உள்ள பண்டாகர் என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு டிராக்டரில் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் குறுக்கே சென்ற ஆடு மீது மோதாமல் இருப்பதற்காக டிராக்டர் ஓட்டுநர் டிராக்டரைத் திருப்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய அந்த வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments