கோவில்பட்டியில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக் கேட்ட மனைவியை அடித்து சித்திரவதை செய்த கணவர் கைது..!

0 3715

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக் கேட்ட மனைவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

இனாம்மணியாச்சி சீனிவாசநகரைச் சேர்ந்த  ரமேஷூக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அவரது செல்போன் மூலம் அறிந்த மனைவி ராதிகா, அதனை தட்டிக் கேட்டுள்ளார்.

மேலும் இதுபற்றி உறவினர்களிடமும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ராதிகாவை அடித்து உதைத்து கீழே தள்ளியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் ரமேசை கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments