4000 அடி தூர இலக்கையும் சுட்டுத் தள்ளும் நாய் வடிவ ரோபோ அமெரிக்க ராணுவ வர்த்தக கண்காட்சியில் வெளியீடு

0 1924
4000 அடி தூர இலக்கையும் சுட்டுத் தள்ளும் நாய் வடிவ ரோபோ அமெரிக்க ராணுவ வர்த்தக கண்காட்சியில் வெளியீடு

கிட்டத்தட்ட 4 ஆயிரம் அடி தூரத்தில் உள்ள இலக்கையும் குறிதவறாமல் சுடும் நாய் வடிவிலான ரோபோ அமெரிக்க ராணுவ வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

பிலடெல்பியாவை தளமாகக் கொண்ட கோஸ்ட் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆயுத உற்பத்தியாளர் SWORD இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளன.

எந்தச் சூழ்நிலையிலும் பதுங்கி நடந்து செல்லும் இந்த ரோபோவின் மேல் பகுதியில் உள்ள க்ரீட்மூட் ஸ்னைப்பர் வகைத் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோவின் விலை மற்றும் பராமரிப்புச் செலவு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments