முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் 90வது பிறந்தநாள் ; கலாம் தேசிய நினைவகம் மின்விளக்குகளால் அலங்கரிப்பு

0 1416
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் 90வது பிறந்தநாள்

 

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்புவில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் ஏவுகணை நாயகனாக கருதப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் 1931 அக்டோபர் 15-ல் பிறந்தார். இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று தனது எளிமையால் மக்களை கவர்ந்த அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

அவரது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments