தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியது இந்தியா

0 1496

அண்டை நாடுகளுக்கு இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஸி, நேபாளம், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளாகக் குறிப்பிட்டார்.

உற்பத்தி மற்றும் தேவையின் அடிப்படையில் தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பக்ஸி தெரிவித்தார்.

கடந்த மாதம் பிரதமர் மோடி ஐ.நா.சபையில் பேசியபோது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பிவைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments