பூந்தமல்லி ஆர்டிஓ அலுவலகத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்

0 1392
பூந்தமல்லி ஆர்டிஓ அலுவலகத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்

சென்னையை அடுத்த பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கரை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் ஒளிரும் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டினால்தான் வாகனத்தை புதுப்பிப்பதற்கான சான்று வழங்கப்படுவதாகவும் மற்ற நிறுவனங்களின் ஸ்டிக்கரை ஒட்டினால் வாகனங்களை புதுப்பிக்கும் சான்று வழங்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது.

மேலும் அந்த ஸ்டிக்கர் ஓட்டும் நிறுவனத்தை போக்குவரத்து அதிகாரிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை சோதனை செய்யும் இடத்தில் அனுமதிப்பதாகவும், ஆயிரத்து 500 மதிப்புள்ள ஸ்டிக்கர்கள் 3ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் புகார்கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments