ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை ,கொல்கத்தா அணிகள் மோதல், கோப்பையை வெல்லும் அணி யார்?

0 3465

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் மற்றும் பிளே ஆப் சுற்றில் வென்ற சென்னை முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூருவை வென்ற கொல்கத்தா, 2-வது தகுதிச் சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

கொல்கத்தாவை வென்று ஐ.பி.எல். தொடரில் 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்கும்.

அதேநேரம் 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற கொல்கத்தாவும் கடுமையாகப் போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments