பாதுகாப்புத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கத் திட்டம்: 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

0 1489

பாதுகாப்புத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 7 புதிய நிறுவனங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பாதுகாப்புத்துறையில் தற்சார்பை மேம்படுத்தும் வகையில், ஆயுத தொழிற்சாலை வாரியம் 7 நிறுவனங்களாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு இப்பணிகளை மேற்கொண்டது.

ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் கீழ் உள்ள 41 தொழிற்சாலைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில் தற்போது வாரியம் பிரிக்கப்பட்டு, 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்து உரைநிகழ்த்துகிறார்.

தமிழகத்தில் ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, திருச்சி ஆயுதத் தொழிற்சாலை ஆகியவை இனி பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments