'கோடிகொப்பா-3' படத்திற்கு டிக்கெட் தர மறுத்த திரையரங்கம் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்..!

0 6429

கர்நாடக மாநிலத்தில் டிக்கெட் தர மறுத்த தியேட்டர் மீது கற்களை வீசி ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

விஜயபுரா மாவட்டத்தில் நடிகர் கிச்சா சுதீப்பின் 'கோடிகொப்பா-3' என்ற படம் ரிலீசாக இருந்த நிலையில், தியேட்டர் முன் அதிகளவில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

இந்நிலையில் படம் ரிலீசாகவில்லை எனக் கூறி தியேட்டர் நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரின் கதவுகளை உடைத்து கல்வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments