கென்ய ஓட்டப்பந்தய வீராங்கனை கத்தியால் குத்தி கொலை.. கணவருக்கு வலை..!கென்யாவில் அதிர்ச்சி

0 2402

ஓட்டப்பந்தயத்தில் பல பதக்கங்களை வென்று குவித்த கென்ய வீராங்கனையை அவரது கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான ஆக்னஸ் டிரோப் (Agnes Tirop) உலகளவில் நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 முறை வென்கலம் வென்றுள்ளார். சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 30 நிமிடத்தில் ஓடி புதிய உலக சாதனை படைத்தார். ஐட்டென் (Iten) நகரில் கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஆக்னஸின் (Agnes) பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது கணவர் தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக அழுது கொண்டே கூறியுள்ளார்.

பெற்றோர் புகாரளித்ததை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்த போது கழுத்து மற்றும் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் ஆக்னஸ் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்தார். தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments