''சாரி டாடி, ஐ மிஸ் யூ'' என உருக்கமாக தந்தைக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட மகள்!

0 3792

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் தந்தை தோல்வியடைந்ததால் மனமுடைந்த மகள், மிஸ் யூ டாடி என தந்தைக்கு உருக்கமாக மெசேஜ் அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்பத் என்பவர் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் அவரது 22 வயது மகள் வான்மதி மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை சாரி டாடி, ஐ மிஸ் யூ என உருக்கமாக மெசேஜ் அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் புறப்பட்டு சென்ற வான்மதி விஷமருந்தி சொந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

செல்போனில் மெசேஜைப் பார்த்து மகளை பல இடங்களில் தேடிய சம்பத், கிணற்றுக்கு அருகே வான்மதியின் ஸ்கூட்டி கிடந்ததை கண்டு, சடலத்தை மீட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments