பாகிஸ்தான் அத்துமீறினால் உட்புகுந்து தாக்குதல் நடத்தப்படும் - அமித் ஷா எச்சரிக்கை

0 2501

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் உட்புகுந்து தாக்குதல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.

கோவாவில் தேசியத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். அதன்பின் பேசிய அவர், மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பாகிஸ்தானுக்குள் இந்தியப் படையினர் உட்புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது முக்கிய நடவடிக்கை எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இது நேரமில்லை என்றும், அது எல்லையில் அத்து மீறுவது உட்புகுந்து தாக்குதல் நடத்த அழைப்பு விடுப்பதாகும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments