காஞ்சிபுரம்: மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்த மதுக்கடை பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

0 1068

காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்த டாஸ்மாக் கடை பணியாளர் துளசிதாசின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப, கருணை அடிப்படையில் உரிய பணி வழங்கப்படும் என்றும் குறிபிட்டுள்ளார்.

துளசிதாசின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர், சம்பவத்திற்கு காரணமானர்களை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடிக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments