BSF-க்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய விவகாரம்: பஞ்சாப் அரசின் சுதந்திரம் பறிபோகாது என BSF விளக்கம்

0 1798

பஞ்சாபில் பிஎஸ்எஃப்-ன் அதிகாரம் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையால் பஞ்சாப் மாநில அரசின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என பிஎஸ்எஃப் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை வாபஸ் பெறுமாறு உள்துறை அமைச்சகத்திடம் முதலமைச்சர் சரண்ஜித் சிங் வலியுறுத்தி உள்ளார். ஆனால் சர்வதேச எல்லை வழியாக நடக்கும் போதை மருந்து மற்றும் ஆயுத கடத்தலை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிஎஸ்எஃப், இது போன்ற விவகாரங்களில் தங்களால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் பஞ்சாப் போலீசிடமே ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments