நகை கடைகளில் குறிவைத்து ஒரே பாணியில் கைவரிசை-15 சவரன் நகைகளை மட்டும் திருடிச்செல்லும் கொள்ளையன்கள்

0 1945

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகை கடைகளை குறிவைத்து ஒரே பாணியில், 15 சவரன் நகைகளை மட்டும் திருடிச் செல்லும் கொள்ளையன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையான ஊரம்பு பகுதியில் உள்ள RB நகை கடைக்கு அதிகாலையில், முகக்கவசம் அணிந்தபடி வந்த 2 கொள்ளையன்கள், கடையின் ஷட்டரை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று 15 சவரன் நகையை மட்டும் திருடிவிட்டு மற்ற நகைகளை விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் கடைக்குள் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அண்மையில், நித்திரவிளை, மணவாளகுறிச்சி, கருங்கல், ரீத்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நகை கடைகளில் கொள்ளையன்கள் 15 சவரன் நகைகளை மட்டும் சரியாக கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments