முதலில் வரும் 3000 பேருக்கு ரூ.50க்கு புடவை.. அலைமோதிய மக்கள் கூட்டம்.. இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்..!

0 5464

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 50 ரூபாய்க்கு சில்க் சாரிஸ் என்ற விளம்பரத்தால் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

ஆலங்குளத்தில் தனியார் துணிக்கடை புதிதாக திறப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக முதலில் வரும் 3 ஆயிரம் பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் சாரிஸ் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கடையில் மக்கள் கூட்டமாக திரண்டனர்.

தகவலறிந்து நேரில் வந்த சுகாதார துறையினர், கொரோனா பரவல் காலத்தில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் கூட்டத்தை திரட்டியதால் துணிக்கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments