பண்டிகை காலம் என்பதால் கோயம்பேடு சந்தையில் பூக்கள், பழங்களின் விலை உயர்வு..!

0 1830

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். பண்டிகை காலம் என்பதால் பூக்கள், பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது.  

சென்னை கோயம்பேடு சந்தையில் பொரி, கரும்பு, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், மாவிலை தோரணம், வாழைக் கன்று, பழ வகைகள், பூக்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது. பொதுமக்கள் அதிகளவில் வந்து பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதன் காரணமாக பூக்கள், பழங்கள் விலையும் சற்று உயர்ந்துள்ளது. 50ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி பூ ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், 60ரூபாய்க்கு விற்பனையான பன்னீர் ரோஜா ஒருகிலோ 150ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, மல்லிகை பூ ஒரு கிலோ 200ரூபாயில் இருந்து 600ரூபாயாகவும், முல்லை பூ 150ரூபாயில் இருந்து 600ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மொத்த விலையில் பழங்களின் விலையில் வழக்கத்தை விட சற்று உயர்ந்திருக்கிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments