விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்... சென்னையிருந்து கடந்த 2 நாட்களில் 2.43 லட்சம் பேர் பயணம்..!

0 2294

சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் வெளியூர்களுக்கு பயணித்துள்ளனர்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என அடுத்தடுத்து 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.

கோயம்பேட்டில் இருந்து அதிகளவில் அரசுப் பேருந்துகள் இயங்கும் நிலையில், தாம்பரம் மற்றும் பூந்தமல்லியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களில் மட்டும் 800 சிறப்பு பேருந்துகள் உட்பட 5,422 பேருந்துகள் இயக்கப்பட்டன.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments