எல்லை மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரங்களை அதிகரித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு

0 1823
எல்லை மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரங்களை அதிகரித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு

பஞ்சாப், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில், சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரங்களை அதிகரித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி எல்லையில் இருந்து நாட்டின் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சோதனைகளை நடத்தவோ, சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யவோ எல்லை பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது இதுவரை 15 கிலோ மீட்டராக இருந்தது.

இது தவிர நாகலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் லடாக்கில் சோதனைகளை நடத்தவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கைகளை எடுக்கவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகார வரம்பு 80 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைகளில் ஊடுருவல் மற்றும் டிரோன்கள் வாயிலாக நடக்கும் தீவிரவாத முயற்சிகளை தடுக்கவும் எல்லை பாதுகாப்புப் படையின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments