வில்லேந்தி வந்தவன் அம்பு எய்ததில் 5 பேர் உயிரிழப்பு; 2 பேர் காயம்

0 2018
வில்லேந்தி வந்தவன் அம்பு எய்ததில் 5 பேர் உயிரிழப்பு; 2 பேர் காயம்

நார்வேயில் கோங்க்ஸ்பர்க் நகரில் வில்லுடன் வந்த ஒருவன் அம்புகளை எய்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இருவர் காயமடைந்தனர். நார்வேயில் தென்கிழக்கில் உள்ள கோங்க்ஸ்பர்க் நகரில் வில் அம்புடன் வந்த ஒருவன் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மீது அம்பு எய்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

காவலர் உட்பட இருவர் காயமடைந்தனர். அம்பு எய்ததைப் பார்த்த மற்றவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள அங்கிருந்து ஓடினர். அம்பு எய்தவனை அடுத் அரைமணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர் இது பயங்கரவாதச் செயலா என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவன் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவன் என்றும், அவன் கோங்க்ஸ்பர்க் நகரில் குடியிருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுவாக நார்வேயில் காவல்துறையினர் கையில் ஆயுதம் வைத்திருப்பதில்லை. இந்தத் தாக்குதலையடுத்துக் காவல்துறையினர் ஆயும் ஏந்தி நிற்கப் பணிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments