காவல் நிலைய பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை... வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்..!

0 2135
வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்..!

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்த வெங்கடேசன், அங்கு கணினி பிரிவில் பணிபுரிந்து வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் எழுத்தர் வெங்கடேசன், எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், எழுத்தர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments