தமிழகத்தில் முதன்முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100ஐக் கடந்தது..!

0 3277

தமிழகத்திலேயே முதன்முறையாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் டீசல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனையாகிறது. கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 104 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலை அதன் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படுவதால், பெட்ரோல் பங்க் இருக்கும் தூரம் மற்றும் போக்குவரத்துக்கான செலவை பொறுத்து அந்தந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் விலையில் சற்று மாற்றம் ஏற்படும் என பங்க் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 102.10 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 97.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments