வங்கக்கடல், அரபிக்கடலில் ஒரே நாளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக தகவல்

0 5382
வங்கக்கடல், அரபிக்கடலில் ஒரே நாளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் ஒரே நாளில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதேபோல, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒரே நாளில் உருவாகியுள்ள இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக இந்திய நிலப்பரப்பில் தெற்கு தீபகற்ப மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments