கேரளாவில் மண் சரிவில் குட்டிகளுடன் சிக்கிக் கொண்ட நாயை பத்திரமாக மீட்ட இளைஞர்..!

0 2760

கேரளாவில் மண் சரிவில் குட்டிகளுடன் சிக்கிக் கொண்ட நாயை நபர் ஒருவர் பத்திரமாக மீட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு பின் நாய் ஒன்று 6 குட்டிகள் ஈன்று வசித்து வந்துள்ளது. சில நாட்களாக அந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, பச்சிளம் குட்டிகளுடன் நாய் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டது.

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று அஷ்ரப் பார்த்த போது, உடல் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து நாயின் தலை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மண் குவியலை அகற்றி நாயையும், இரண்டு குட்டிகளையும் பத்திரமாக மீட்டார்.மற்ற நான்கு குட்டிகள் மண்ணில் புதைந்து உயிரிழந்துவிட்டன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments