லேசார் தொழில்நுட்பத்தில் ஊசியே இல்லாத நவீன வகை சிரீஞ்ச் கண்டுபிடிப்பு

0 4761
லேசார் தொழில்நுட்பத்தில் ஊசியே இல்லாத நவீன வகை சிரீஞ்ச் கண்டுபிடிப்பு

நெதர்லாந்தில் லேசர் தொழில்நுட்பத்தில், செலுத்தும் போது வலியே தெரியாத வகையில், ஊசியே இல்லாத சிரீஞ்சை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிரீஞ்சில் ஏற்றப்படும் மருந்து மில்லி செகண்டில் சூடாகி நீர்குமிழியாக மாறி, நோயாளி மீது தெளிக்கும் போது தோலில் உள்ள நுண் துவாரங்களிள் வழியாக உடலில் சென்று செயலாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிரீஞ்ச் செலுத்துபவர்களுக்கு கொசு கடியை விட மிக குறைந்தளவிலான உணர்ச்சியே ஏற்படும் என்றும், ஊசி போட்டுக் கொள்ள தயங்குபவர்கள், மருத்துவ கழிவுகளை குறைக்கும் விதமாக சிரீஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments