எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 23 தமிழக மீனவர்கள் கைது

0 1730
எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 23 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 23 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கடைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சின்னப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான இரண்டு படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்களையும் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments