கொடுங்கையூரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.55 கோடி பறிமுதல்..!

0 6821

சென்னை கொடுங்கையூரில் உரிய ஆவணமின்றி ஒரு கோடியே 55 லட்ச ரூபாய் கொண்டு சென்ற  2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எருக்கஞ்சேரி சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு காரை மறித்து விசாரித்துள்ளனர்.

வாகனத்தில் இருந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஒரு பையில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். ஒரு கோடியே 55 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் எந்த காரணத்திற்காக பணம் கொண்டு வரப்பட்டது என விசாரித்து வருகின்றனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments