ஆவடியில் மாணவர்கள் ரயில் மறியல் போரட்டம்..!

0 12758

சென்னை அடுத்த ஆவடியில் மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் புத்தகப்பையில் ஜல்லிக் கற்களுடன் பயணம் செய்ததாக மாணவர் ஒருவரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர்.

கைதான மாணவனை விடுவிக்கக் கோரி 50-க்கும் மேற்பட்டமாணவர்கள் தண்டவாளத்தில் மறியலில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் பேசி மாணவன் நவீனை விடுவித்த நிலையில் மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments