கருக்கலைப்புக்கான கால வரம்பு 20 முதல் 24 வாரங்களாக மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

0 2580
கருக்கலைப்புக்கான கால வரம்பு 20 முதல் 24 வாரங்களாக மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெண்கள் சாதாரணமாக 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள ஒரு டாக்டரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய இரு டாக்டர்களின் பரிந்துரையும் தேவை என விதிகள் அமலில் உள்ளன.

பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்டத்திருத்தம்,நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு நேற்று அமல்படுத்தியிருப்பதாக அறிவித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments