முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது - எய்ம்ஸ் மருத்துவமனை..!

0 2064

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மன்மோகன்சிங்  மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என நாடு பிரார்த்திப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல்நலம் சீராக உள்ளது என்றும் அவருக்கு வழக்கமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments