கட் அடித்த மாணவர்கள்... காட்டு அடி அடித்த இயற்பியல் வாத்தியார்... அடிக்கு அடி..! உதைக்கு உதை..!

0 8942

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது வகுப்புக்கு கட் அடித்த மாணவர்களை தரையில் முட்டிபோடவைத்து, இயற்பியல் ஆசிரியர் அடித்து உதைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை மதியம் பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் 6 பேரை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன் தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை என கேட்டு ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த கம்பால் அடித்து காலால் உதைத்துள்ளார்.

தங்கள் ஆசிரியர் சுப்பிரமணியன் திடீரென ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனாக மாறியதை கண்டு மிரண்டு போன மாணவர்கள் இந்த காட்சியை தங்களது செல்போன் கேமரா மூலம் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

தற்பொழுது சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. அரசுப்பள்ளியில் மாணவனை ஆசிரியர் கம்பால் அடித்தும், காலால் உதைக்கும் காட்சிகளை கண்டு மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுதுள்ளது.

அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்களும் படிப்பை மட்டுமே இலக்காக கொண்டு அடக்கத்துடன் பள்ளிக்கு வந்து ஒழுக்கமாக படித்துவிட்டு சென்றால் இது போன்ற இம்சைகளில் சிக்க நேராது என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments