பாலில் மயக்க மருந்து கலந்து கணவன் கொலை.. அகப்பட்ட அன்னப்பிரியா..!

0 5537
கார் ஓட்டுநருடன் மலர்ந்த காதல்.. பாலில் தூக்கமாத்திரை கொடுத்து கணவன் கொலை..!

சங்ககிரி அருகே  நிதி நிறுவன அதிபர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக  பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்த அவரது மனைவி காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுனருடன் மலர்ந்த விபரீத காதலால் நிகழ்ந்த சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பு.....

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தயானந்த். நிதி நிறுவனம் நடத்திவரும் இவர், கார்கள் மற்றும் மினி டெம்போக்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார்.

தயானந்திற்கும் சேலத்தை சேர்ந்த அன்னப்பிரியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது உறவினர்களை தொலைபேசியில் அழைத்த தயானந்தின் மனைவி அன்னப்பிரியா, தனது கணவருக்கு வலிப்பு வந்ததாகவும் அதனால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார். உறவினர்கள் வந்து பார்த்தபொழுது தயானந்த் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தயானந்தின் மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து அவரது உறவினர்கள் தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து உறவினர்களிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் போலீசார் விசாரணை செய்த போது கணவனை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தயானந்த் மனைவி அன்னப்பிரியாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மில்க் அபிராமி ஸ்டைலில் அன்னப்பிரியா செய்த சேட்டை அம்பலமானது..!

அன்னபிரியாவுக்கும் அவரது கார் ஓட்டுநரான தண்ணீர் முருகனுக்கும் வரவு செலவு கணக்கு தொடர்பான பழக்கம் ரகசியகாதலாக மாறியுள்ளது. இருவரது காதல் விவகாரம் கணவர் தயானந்திற்க்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து கடந்த 11ந் தேதி இரவு வழக்கமான பணிகளை முடித்துக்கொண்டு இரவு 10 மணியளவில் தனது நண்பருடன் பேசிவிட்டு தயானந்த் அவரது வீட்டிற்கு உறங்கச் சென்றபோது அவரது மனைவி அன்னப்பிரியா பாலில் மயக்கமாத்திரை கொடுத்து கணவனை மயக்கமடைய செய்துள்ளார்.

நள்ளிரவில் காதலன் தண்ணீர் முருகனை வரவழைத்து இருவரும் சேர்ந்து மயங்கிக்கிடந்த தனது கணவனின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் கள்ளக்காதலன் முருகன் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. கணவர் சேர்த்து வைத்துள்ள பணத்திற்காகவும், தங்களது தவறான தொடர்புக்கு, இடையூறாக இருந்ததாலும், காதலனுடன் சேர்ந்து கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்தாக அன்னப்பிரியா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவான காதலன் தண்ணீர் முருகனையும் தேவூர் காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது தயானந்த் கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது. திருட்டுக்காதலர்கள் இருவரையும் தேவூர் போலீசார் கைது செய்து, சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

 

அதே நேரத்தில் அன்பான கணவனும், ஆசைக்கு மகனும், அளவில்லா சொத்து இருந்தும் மனதை கட்டுப்படுத்த தவறியதால் திருட்டுகாதலில் விழுந்து , கணவனை கொலை செய்து விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் காதலனுடன் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அன்னபிரியா..!

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments