லக்கிம்புர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கு: மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

0 1543

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில் நிகழ்ந்த வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

அக்டோபர் 3 ஆம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை விட்டு மோதியதை அடுத்து நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிஸ் மிஸ்ரா, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments