இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார் இந்திய ராணுவ தளபதி நரவானே

0 1883

இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.

 4 நாள் சுற்றுப் பயணமாக நேற்று இலங்கை சென்ற நரவானே, அந்நாட்டின் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து, இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளின் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பை மேம்படுத்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தியா - இலங்கை ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ள மித்ர சக்தி என்ற போர் பயிற்சி இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்டத்தை நாளை வியாழக்கிழமை நரவானே பார்வையிட இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments