கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

0 1854

பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்த சுற்றறிக்கையில் ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட விழாக் காலங்களை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது, அதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது எனவும், ஆகையால், வருகிற 20-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் ஆம்னிப் பேருந்துகளுக்கான சேவையில் சிறப்பு சோதனை மேற்கொள்ளவும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 ஆம்னி பேருந்துகளுக்கான சேவையில் ஏதேனும் புகார்கள் இருந்தால் 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments