தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையன்கள் கைது ; 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

0 1508
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையன்கள் கைது

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி, குன்றக்குடி, திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக எழுந்த புகாரையடுத்து, 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அந்த பைக்கின் பதிவு எண் போலி என்பதும், இருவரும் பைக்குகளை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments