கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார்..அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

0 2152

திருச்சி மாவட்டத்தில், கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சிராப்பள்ளி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் செயலாளராக உள்ள கார்மேகம், கடந்த 2016-ம் ஆண்டு அப்போது சங்கத்தின் தலைவராக இருந்த குமார் உடன் இணைந்து, தென்னூர் அண்ணாநகரில் உள்ள 23,500 சதுர அடி காலிமனையை, பழைய அரசாணை மூலம் சதுரடிக்கு 150 ரூபாய் என விற்பனை செய்துள்ளார்.

ஆனால் அரசின் வழிகாட்டு மதிப்புப்படி, அந்த நிலத்தின் சதுர அடி மதிப்பு, 3000 ஆயிரம் என கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு 5.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கார்மேகம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments