மகளின் திருமணத்தை நடத்த முடியாத விரக்தி..துணிக்கடை உரிமையாளர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை

0 1714

சென்னை வியாசர்பாடியில் கடன் தொல்லை அதிகரித்ததால் மகளின் திருமணத்தை நடத்த முடியாத விரக்தியில் துணிக்கடை உரிமையாளர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

எம்கேபி நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்த ஹரிஷ் சந்த் என்ற அந்த நபர், பாலாஜி ரெடிமேட் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்தார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஒரு மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே துணிக்கடையில் போதிய வருமானமின்றி கடன் தொல்லையால் அவதியுற்று வந்துள்ளார் ஹரிஷ்சந்த்.

இரண்டாவது மகளுக்கு திருமன ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அதற்குப் போதிய பணம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் ஹரிஷ்சந்த், காயகறி வெட்டும் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments