தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கேட்டுப் பெற வேண்டும் ; ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

0 1755
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கேட்டுப் பெற வேண்டும்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கேட்டுப் பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அறிக்கையில் கடந்த மாதம் 27-ந் தேதி நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய 119.5 டி.எம்.சி. தண்ணீரில் 85.8 டி.எம்.சி. தண்ணீரை மட்டும் தான் கர்நாடகா திறந்துவிட்டிருப்பதாக தமிழக அரசு புகார் கூறியதை அடுத்து, உடனடியாக எஞ்சிய தண்ணீரை விடுவிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா இன்னும் தண்ணீரை திறந்துவிடாமல் மௌனம் காப்பதாகவும், உடனடியாக முதலமைச்சர் தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.பி.எஸ். கேட்டுக் கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments