ஆயுதபூஜை, விஜயதசமியை ஒட்டி வருகிற 16-ந் தேதி பள்ளிகளுக்கு பொது விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை

0 2286
ஆயுதபூஜை, விஜயதசமியை ஒட்டி வருகிற 16-ந் தேதி பொது விடுமுறை

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, வருகிற சனிக்கிழமை 16-ந் தேதி பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் சுற்றறிக்கையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிகளுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், ஆசிரியர்கள் சிலரும் சொந்த மாவட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை, விஜயதசமியை ஒட்டி வருகிற 14,15 ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 16-ந் தேதி சனிக்கிழமை அன்றும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments