குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதித்தால் தமிழகத்தில் அதற்கான பணிகள் முதலில் தொடங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1404
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதித்தால் தமிழகத்தில் அதற்கான பணிகள் முதலில் தொடங்கப்படும்

2 வயது முதல் 18 வயது வரையுள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்ததும் முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில் அதற்கான பணிகள் தொடங்கி விடும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு சிறப்புப் பிரிவை அமைச்சர் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

புதிய மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் வல்லுநர் குழு ஆய்வு நடத்திய பின் மருத்துவப்படிப்புக்கான கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெற உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விழாக்காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments