நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை..! 7 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி மேல்முறையீடு

0 1441

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்ய கோரும் விசாரணை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை  சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2013 ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

நிலப் பிரச்சனை தொடர்பாக அரங்கேற்றப்பட்ட இந்தக் கொலையில் 7 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து,  சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு  வழக்கு தொடர்பான விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.இந்த வழக்கு விசாரணையை  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், மஞ்சுளா அமர்வு தள்ளிவைத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments