துப்பாக்கி சூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போனின் புகைப்படம் வைரல்

0 2410
துப்பாக்கி சூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போன்

பிரேசிலில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

பெட்ரோலினா நகரில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவத்தின் போது பெட்ரோ என்பவரை நோக்கி கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றான்.

பாக்கெட்டில் அவர் வைத்திருந்த 5 ஆண்டுகள் பழமையான மோட்டரோலா G5 செல்போன் அவர் மீது பாய இருந்த தோட்டாவை தடுத்து நிறுத்தியது. இடுப்பில் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெட்ரோ பின்னர் வீடு திரும்பினார்.

டிஸ்ப்ளே சேதமடைந்த செல்போனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார். செல்போனின் செல்போன் கேஸில் இருந்த ஹல்க் படம் தோட்டாவை தடுத்து நிறுத்தியதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments