லக்கிம்பூர் விவசாயிகள் கொலை கண்டிக்கத்தக்கது - நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

0 2241
லக்கிம்பூர் விவசாயிகள் கொலை கண்டிக்கத்தக்கது-நிர்மலா சீத்தாராமன்

லக்கிம்பூர் கேரியில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டது முழவதும் கண்டிக்கத்தக்கது என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் போஸ்டனில் உள்ள ஹார்வார்டு கென்னடி ஸ்கூலில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இதை தெரிவித்தார்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறிய அவர், அது பற்றி எல்லாம் குரல் எழுப்பாமல், உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடப்பதால் அது குறித்து சிலர் பேசுவதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்கள் எவரும் எதுவும் கூறவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், லக்கிம்பூர் சம்பவத்தை அனைவரும் கண்டிப்பதாகவும், யாரும் அதற்காக வக்காலத்து வாங்கவில்லை எனவும் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments